• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ராயபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்

ராயபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை 3000 கடந்துள்ளது. மேலும், தண்டையார்பேட்டையிலும் கொரோனா தொற்றால் 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் ஜுன் 2ம் தேதி கண்டறியப்பட்ட 1091 தொற்றுகளில், 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால், சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. இதில், 8,506 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 135 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 67 சதவிகிதம் ஆகும்.

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 125 பேரும், தேனாம்பேட்டை 101 பேரும், அண்ணாநகரில் 70 பேரும், அடையாறு  66 பேரும், திரு.வி.க.நகரில் 60 பேரும், கோடம்பாக்கம் 54 பேரும், அம்பத்தூரில் 32 பேரும்,  திருவொற்றியூரில் 24 பேரும், மாதவரத்தில் 22 பேரும், வளசரவாக்கத்தில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சோழிங்கநல்லூரில் 17 பேரும், பெருங்குடியில்  15 பேரும், ஆலந்தூரில் 14 பேரும், மணலியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 3060

தண்டையார்பேட்டை 2007

கோடம்பாக்கம் 1921

தேனாம்பேட்டை 1871

திரு.வி.க.நகர் 1711

அண்ணா நகர் 1411

அடையாறு 949

வளசரவாக்கம் 910

அம்பத்தூர் 619

திருவொற்றியூர் 559

மாதவரம் 400

சோழிங்கநல்லூர் 279

பெருங்குடி 278

மணலி 228

ஆலந்தூர் 243

ராயபுரத்தில் கடந்த 16ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்தது. அடுத்த 10 நாட்களில் 26ம் தேதி 2000 ஐ கடந்த நிலையில், அடுத்த 8 நாட்களில் இன்று 3000ஐ கடந்துள்ளது.

ராயபுரத்தில் மொத்தம் இதுவரை 233 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிளாக மாற்றப்பட்டன. இதில் 166 பகுதிகள் விடுவிக்கப்பட்டு, தற்போது 67 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளன. இந்த மண்டலத்தில் மக்கள் அடர்த்தி அதிகம் என்பதால் இங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேபோல், சென்னையில் இரண்டாவது மண்டலமாக தடண்டையார்பேட்டையில் தொற்று எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. இந்த மண்டலத்தில் கடந்த கடந்த 25ம் தேதி தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்தது.

அடுத்த 9 நாட்களில் இன்று 2000ஐ கடந்ததுள்ளது. கடந்த 10 நாட்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் தொற்றின் பரவல் வேகம் என்பது மற்ற மண்டலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிப்பில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டுமே 30 சதவிகித பாதிப்ப்பு பதிவாகி உள்ளது.

Also read... எல்லையில் இறக்கி விட்ட கேரள அரசு; உள்ளே அனுமதிக்காத தமிழக அரசு...’ குழந்தைகளுடன் தவிக்கும் தமிழர்கள்

சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




>

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: