ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

ஹரித்துவார் கும்பமேளா

கடந்த இரண்டு நாட்களில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  கடந்த இரண்டு நாட்களில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஹரித்துவாரில் கும்ப மேளா நடந்து வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த திருவிழாவில், நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர வந்து கங்கையில் புனித நீராடுவது வழக்கம். இந்த புனித நீராடல், பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். இதன் 3 ஆம் கட்ட புனித நீராடல் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகின்றது. அந்தவகையில் 3 ஆம் கட்ட புனித நீராடல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

  இந்நிலையில், நேற்று மதியத்திற்குள் 8 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள்வரை புனித நீராடியதாக கும்ப மேளா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட காவல்துறை டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். அத்துடன், கொரோனா கட்டுப்பாடு காரணமாக, எதிர்பார்த்ததை விட குறைவான மக்கள் கூட்டம் நீராட வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

  அங்கே, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, புனித நீராட வந்த பக்தர்களுக்கு காவல்துறையினர் தரப்பில், முக கவசங்களை வினியோகிக்கப்பட்டது. எனினும், முறையாக முகக்கவசம் அணியவில்லை என்றும், உரிய முறையில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றவர்களுள் சுமார் ஆயிரம் பேருக்கு கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று கண்டறியப் பட்டிருக்கிறது.

  இந்நிலையில், கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Must Read : மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய ஊரடங்கை மோடி அறிவிப்பார்: காங்கிரஸ் பிரமுகர் நானா படோலே

   

  நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,44,93,238 பேர் கொரோனா தடுப்பூசி போடுக் கொண்டுள்ளனர்.
  Published by:Suresh V
  First published: