இந்தியாவில் 1.32 லட்சத்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கோப்புப் படம்

ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேர் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கிகு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேர் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கிகு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பெங்களூரு உட்பட 8 நகரங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

  இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பங்கேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா. கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

  அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கல்புர்கி, உடுப்பி உட்பட 8 நகரங்களில் வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த உத்தரவு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் காய்கறி அங்காடியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  மும்பையில் மட்டும் நேற்று புதிதாக 8 ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் மும்பையில் உள்ள தாதர் காய்கறி சந்தையில், காய்கறிகளை வாங்க இன்று காலை பொதுமக்கள் அதிகளவில் கூடினர். அப்போது அவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாததால் அங்கு கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டது.

  Must Read : தடுப்பூசி திருவிழா... : மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

   

  இந்நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய புதிய கொரோன கட்டுப்பாடுகள் நாளை முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: