சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் உள்பட 35 அதிகாரிகளுக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த  தலைமை பொறியாளர் உட்பட 35க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் உள்பட 35 அதிகாரிகளுக்கு கொரோனா
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதுவரை 400 க்கும் மேற்ப்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய் துறை, மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்து உயர் அதிகாரிகள் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தற்போது குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பி விட்டனர்.

Also read... முழு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட 35-க்கும் மேற்ப்பட்ட பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில் மைக்ரோ குழுக்கள் அமைக்கப்பட்டு தினசரி பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிக்கப்பட்ட வீடு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணிப்பது, தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பணிகளை பொறியாளர்கள் செய்து வந்தனர். இப்போது இந்த பணிகளை செய்து வந்த பொறியாளர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading