கிண்டி சிறுவர் உயிரியல் பூங்காவில் ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை, கிண்டி சிறுவர் உயிரியல் பூங்காவில் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிண்டி சிறுவர் உயிரியல் பூங்காவில் ஊழியர்களுக்கு கொரோனா
மாதிரி படம்
  • Share this:
கிண்டி சிறுவர் பூங்காவில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், விலங்குகள் மற்றும் தோட்ட பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் இரு விலங்கு பராமரிப்பாளர்கள் இருவர் மற்றும் ஒரு பெண் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Also read... அடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!

இதனிடையே, கிண்டி சிறுவர் பூங்காவை பராமரிக்கும் ஊழியர்கள், அருகில் உள்ள தேசிய பூங்காவிற்கும் சென்று வருவதால், பூங்காவை தூய்மைப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading