முகப்பு /செய்தி /கொரோனா / CoronaVirus | தமிழகத்தில் 2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று

CoronaVirus | தமிழகத்தில் 2-வது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. உயிரிழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த, 21-ம் தேதி உச்சபட்சமாக ஒருநாள் பாதிப்பு 36184 ஆக அதிகரித்தது.

ஆனால், தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு கணிசமாக குறைந்தது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 35483-ஆக குறைந்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 389 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. புதிய உயிரிழப்பும் 484-ல் இருந்து 422-ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 20 ஆயிரத்து 468 ஆகியுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்தனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: CoronaVirus