தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் மாநகராட்சி

தென்சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. 

தென்சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
கோப்புப் படம்
  • Share this:
தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  மற்ற பகுதிகளில் தொற்று குறைந்துவரும் நிலையில்,தற்போது தென்சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், அதிகபட்சமாக சென்னையில்தான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில், சென்னையில் அண்மைக்காலமாக தினந்தோறும் கண்டறியப்படும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. கடந்த 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத மண்டலமாக திரு.வி.க நகர் உள்ளது. வளசரவாக்கம் மண்டலத்தில் 5.3 சதவீதம் குறைந்துள்ளது.


இதனால் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளுக்கு நாள் புதிய நோய்த்தொற்று குறைந்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது.



சென்னையில் பெருங்குடியில் - 0.5 சதவீதம் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. இதே போல் மாதவரம் -1.7 சதவீதமும் ,திருவொற்றியூர் மண்டலத்தில் -2.7 சதவீதம்
ஆரம்பம் முதலே நோய் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்மண்டலத்தில -3.0 சதவீதம் ,  அம்பத்தூரில் -3.6 சதவீதம் , ஆலந்தூரில் 0.4 ,தேனாம்பேட்டை -2.3 சதவீதம் , அடையாறில் 0.2 சதவீதம், தண்டையார்பேட்டை -1.8 சதவீதம், அண்ணாநகரில் -2.8 சதவீதமும், கோடம்பாக்கத்தில் -3.0 சதவீதமும், வளசரவாக்கத்தில் -5.3 சதவீதம், சோழிங்கநல்லூர் 0.5 சதவீதமும் மணலி -3.3 என உள்ள 15 மண்டலங்களிலும் கடந்த 7 நாட்களாக புதிய தொற்றுக்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அதேசமயம், தென்சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 4.0 சதவீதமாகவும்
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 0.5 சதவீதமாகவும்
அடையாறு மண்டலத்தில் 0.2 சதவீதமாகவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக சென்னையில் கடந்த 7 நாட்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சராசரியாக -2.2 சதவீதம் குறைந்து உள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தென்சென்னை பகுதியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading