• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவலில் 2-வது அலை அதிகமாக இருக்கும் - வல்லுநர்கள்..!

கொரோனா பரவலில் 2-வது அலை அதிகமாக இருக்கும் - வல்லுநர்கள்..!

ஒரே நேரத்தில் இரு வைரஸ்களிலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்தெந்த வைரஸ்கள் பரவுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன என்று ப்ரிகாம் மகளிர் மருத்துவமனை மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர். டேனியல் சாலமன் கூறினார்.

ஒரே நேரத்தில் இரு வைரஸ்களிலும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் வசிக்கும் இடத்தில் எந்தெந்த வைரஸ்கள் பரவுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன என்று ப்ரிகாம் மகளிர் மருத்துவமனை மற்றும் பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர். டேனியல் சாலமன் கூறினார்.

1918 மற்றும் 1919 ல் ஏற்பட்ட புளு காய்ச்சல் மற்றும் 2009 ல் ஏற்பட்ட H1N1 நோய் தொற்றின் பரவல் விபரங்களை பயன்படுத்தி இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாவது அலையில் இன்னும் அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்த போதிலும் பொருளாதார இழப்புகளையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சரி செய்ய வேறு வழியின்றி பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதில் உள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் என டெக்ஸாஸ் பல்கலைகழக வைரஸ் ஆய்வாளர் பெஞ்சமின் நியூமன் தெரிவித்துள்ளார்.

    எந்த அறிவியல் காரணமும் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    உலக சுகாதார நிறுவனமும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இல்லை எனில் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவில் வேகமாக பரவும் எனவும் எச்சரித்துள்ளது.

    தொற்று நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளுக்கான மையம் CIDRAP கொரோனா வைரஸ் தொற்று தொடர்வது குறித்து மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

    முதல் கணிப்பின்படி ,

    கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இந்த ஆண்டு முடியும் வரை கண்டுபிடிக்க இயலாது. அதனால் இரண்டாவது அலை தொற்று இந்த ஆண்டு சிறிய அளவில் தொடங்கி அடுத்த ஆண்டு முடியும் வரை தொடர்ச்சியாக இருக்கும். இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    இரண்டாவது கருதுகோளின் படி

    முதல் அலை தொற்றை அடுத்து மெதுவான தொற்று இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மூன்றாவது கணிப்பின்படி

    இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் அலை தொற்று பெரும் அளவில் ஏற்படும் என்றும் அடுத்த ஆண்டும் சிறிய அளவில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    1918 மற்றும் 1919 ல் ஏற்பட்ட புளு காய்ச்சல் மற்றும் 2009 ல் ஏற்பட்ட H1N1 நோய் தொற்றின் பரவல் விபரங்களை பயன் படுத்தி இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

    இதில் எந்த வாய்ப்பின் படி நோய் தொற்று தொடர்ந்தாலும் அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு நாம் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போரில்தான் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: