TN Corona Updates : தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு விகிதமும் குறைவு

கொரோனா பரிசோதனை

மூன்றாவது நாளாக கொரோனா பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு 34867-ஆக பதிவாகியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முழுஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளாக கொரோனா பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு 34867-ஆக பதிவாகியுள்ளது.

    ஒரே நாளில் 404 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20872-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 27026 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 759-ஆக அதிகரித்துள்ளது.

    மாநிலம் முழுவதும் 3 லட்சத்து ஆயிரத்து 580 பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 194-ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published: