கொரோனா: அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? - ராமதாஸ்

”கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது.”

கொரோனா: அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? - ராமதாஸ்
ராமதாஸ், பாமக நிறுவனர்.
  • Share this:
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவுத்துள்ளார்.

இது குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில், “உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading