• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • CoronaVirus : கொரோனா இத்தனை லட்சம் குழந்தைகளை அனாதை ஆக்கியுள்ளதா? - பகீர் தகவல்

CoronaVirus : கொரோனா இத்தனை லட்சம் குழந்தைகளை அனாதை ஆக்கியுள்ளதா? - பகீர் தகவல்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

தங்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கொரோனாவால் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையில், அதிகம் பாதிப்பை சந்தித்த நாடாக இந்தியா இருக்கிறது.

  • Share this:
    கொரோனா வைரஸால் உலகெங்கிலும் உள்ள 15 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள், பாதுகாவலர்களை இழந்து அனாதை ஆகியிருப்பதாக அமெரிக்காவின் தி லான்செட் (The Lancet) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் உலக மக்கள் சொல்லொனா துரயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். உறவுகளை இழந்தும், வருவாயை இழந்தும் தவித்து வருகின்றனர். மக்களுக்கு அரசாங்கங்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தி லான்செட் (The Lancet) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்று நோய் பரவிய முதல் 14 மாதங்களில், தங்களின் தாய் மற்றும் தந்தை என இருவரையும் அல்லது இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களின் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில் அவர்கள் மரணமடைந்ததாலும் அனாதைகள் ஆனாதைகளாக ஆக்கப்பட்டனர் என ஆய்பில் தெரியவந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி, இந்தியாவில் ஏப்ரல் 2021 காலகட்டத்தில் புதிதாக 43,139 குழந்தைகள் அனாதைகளாக ஆகியுள்ளனர் என்றும் இது 2020 மார்ச் மாத்துடன் ஒப்பிடுகையில் 8.5 மடங்கு அதிகம் என்றும் கணக்கிட்டுள்ளனர். 2020 மார்ச் முதல், 2021 ஏப்ரல் மாதம் வரையிலான கொரோனா பாதிப்பு தொடர்பாக 21 நாடுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் இறப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கொரோனா நடவடிக்கை குழு உறுப்பினரான டாக்டர் சூசன் ஹில்லிஸ் கூறுகையில், “எங்கள் ஆய்வு முடிவுகள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அவசரத் தேவையை சுட்டிக் காட்டுகின்றன. இப்போதே அவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும், தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கு உரிய முதலீடு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    தங்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கொரோனாவால் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையில், அதிகம் பாதிப்பை சந்தித்த நாடுகளாக தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கொரோனா காரணமாக குழந்தைகளின் பாதுகாவர்கள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடுகளாக பெரு, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா ஆகியவை உள்ளன.

    Must Read : Covishield : கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் - ஆய்வில் தகவல்

    பொதுவாக அனைத்து நாடுகளிலும், பெண்களை விட ஆண்களில் இறப்பு விகிதமே அதிகமமாக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும், நடுத்தர வயதுடைய மற்றும் வயதானவர்களில் இறப்பு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், கொரோனாவால் தாய்மார்களை இழந்ததை விட தங்கள் தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    Read More : இந்தியாவில் 18 வயது பிரிவினருக்கு செலுத்த எத்தனை கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தேவை?

    இந்நிலையில், கொரோனா தொடர்பான திட்டங்களில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: