பெண்களை ஆபாச படமெடுத்து கைதானவருக்கு கொரோனா... 14 காவலர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு

சேலத்தில் பெண்களை ஆபாச படமெடுத்து கைதானவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விசாரணை நடத்திய மகளிர் காவல்நிலையமே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

  • Share this:
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன், வறுமை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை குறிவைத்து ஆபாசமாக படமெடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அளித்த புகாரை அடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், லோகநாதனுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது . இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவரை விசாரித்த 14 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மகளிர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also read... டிக்டாக்கில் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது
Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading