புழல் மத்திய சிறையில் நேற்று 93 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பபட்டிருந்தது. அவர்களில் 5 பேர் சென்னை ஸ்டான்லி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் சிறை வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.