"கொரோனா பள்ளம்" கவனமாக செல்லுங்கள்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நூதன பலகை!

சாலையில் ஏற்பட்டுள்ள மெகா குழியை சீரமைக்க கோரி கொரோனா பள்ளம் உள்ளது கவனமாக செல்லுங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் விளம்பர பலகை வைத்துள்ள செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நூதன முறையில் விளம்பரம்
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா குழியை சீரமைக்க கோரி கொரோனா பள்ளம் உள்ளது கவனமாக செல்லுங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்  பலகை வைத்துள்ள செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள நூறடி சாலை, செக்காலை ரோடு. இந்த ரோட்டில் ஜாகிர்உசேன் தெரு சாலை, அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை உள்ளிட்ட 5 சாலைகள் சந்திக்கின்றன. இதனால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும்.

இதனிடையே இந்த பகுதியில் உள்ள அருணாச்சலம் செட்டியார் தெரு சாலை தொடக்கத்தில் கழிவுநீர் கால்வாய் பாலம் பல மாதங்களாக சேதமடைந்துள்ளது.


இதனால் அங்கு மெகா குழி ஏற்பட்டுள்ளது. இந்த குழியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் பாலத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த குழியில் நூதன முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் விளம்பர பலகை வைத்துள்ளனர்.

காரைக்குடி நகராட்சியின் அலட்சிய போக்கால் இங்கு அபாயகரமான ‘கொரோனா பள்ளம்’ உள்ளது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என்ற வாசகத்தை எழுதியுள்ளனர். மேலும் அந்த குழியை பழைய பொருட்களை கொண்டு மூடியுள்ளனர்.

இதன் மூலமாவது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்பில் இந்த விளம்பர பலகைகளை வைத்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading