அமெரிக்காவில் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசத்திலிருந்து விடுதலை: மிகப்பெரிய மைல்கல், நல்ல நாள்- அதிபர் பைடன் உற்சாகம்

ஜோ பைடன்

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

    ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:

    முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம்.

    இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல் இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

    கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

    இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “இது மிகப்பெரிய மைல்கல். மிகப்பெரிய நாள். மிகவிரைவில் அதிக அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போட்டி நோய்த்தடுப்பு பாதுகாப்பு அளித்துள்ளோம். ஆகவே முழுமையாக வாக்சின் போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை. வாக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள், ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள், 2 தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் 2 வாரங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும்.

    114 நாட்களில் 250 மில்லியன் வாக்சின்கள் போடப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் நமக்கு தெரிகிறது, 50 மாகாணங்களில் நோய்த்தொற்று குறைந்திருக்கிறது. மரணங்கள்80% குறைந்துள்ளன” என்றார் ஜோ பைடன்.
    Published by:Muthukumar
    First published: