• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையிலிருந்து துக்க நிகழ்வுக்கு வந்த பெண் காவலருக்கு கொரோனா - திருமயத்தில் முழு கடையடைப்பு

சென்னையிலிருந்து துக்க நிகழ்வுக்கு வந்த பெண் காவலருக்கு கொரோனா - திருமயத்தில் முழு கடையடைப்பு

திருமயம் கடைவீதி

திருமயம் கடைவீதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இன்றும் நாளையும் கடையடைப்பை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

  • Share this:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீதமுள்ள 35 பேர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாப்பாவயல் பகுதியில் தந்தை இறந்த துக்க நிகழ்வுக்கு கடந்த 14ஆம் தேதி சென்னையிலிருந்து வந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்றைய முன் தினம் அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இந்நிலையில் அதே துக்க நிகழ்வுக்கு அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்றதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து துக்க நிகழ்வுக்கு வந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் துக்க நிகழ்வுக்கு சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் பெண் காவலர் இருந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்கத்திடம் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் கடைகளை அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்றையதினம் வர்த்தக சங்கத்தினர் இன்றும் நாளையும் முழுநேர கடையடைப்பு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பின்படி இன்று கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் திருமயம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துள்ளனர். இதனால் திருமயம் பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க...

ஒரு முறை கொரோனா பாதித்தவருக்கு இரண்டாவது முறையும் தொற்று ஏற்படுமா?

சீன படையின் கூடாரங்களை அகற்றச் சொன்ன இந்திய வீரர்கள் - மோதல் வெடித்தது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: