மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்

மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது ரத்த மாதிரி பரிசோதித்ததில் அவருக்கு கொரொனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, உடல் சுகாதார ஊழியர்களால் அடக்கம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்
உறவினர்கள் வராத்தால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்
  • Share this:
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு 44 வயது மிக்க ஒருவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது ரத்த மாதிரி பரிசோதித்ததில் அவருக்கு கொரொனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இறந்தவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஜோதிமுத்து. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி புதுச்சேரி கோபாலன் கடை பகுதியை சேர்ந்தவர். இவர்களது மூத்த மகன் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இளைய மகனுடன் அவரது மனைவி புதுச்சேரி வந்துள்ளார்.

கொரோனா காரணமாக அவர் புதுச்சேரியில் தங்க வேண்டியதாகி விட்டது. இந்நிலையில் மனைவி மற்றும் மகனை பார்க்க வந்தவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தது. அவரது ரத்தத்தை சோதித்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க முன்வராததால் அவரது உடல் கோபாலன் கடை சுடுகாட்டில் 15 அடி ஆழம் பள்ளம் தோண்டி கிருமிநாசினி தெளித்து புதைக்கப்பட்டது.


வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் சுகாதார ஊழியர்கள்  உடலை புதைத்தனர்.கொரோனாவில் கொடுமையால் உறவினர்கள் யாருமின்றி ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் கொண்டு வரப்பட்டு  இறுதி சடங்கு ஏதுமின்றி புதைக்கப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை 99-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க...பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை

 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading