புதுச்சேரி: மருத்துவர், கர்ப்பிணி உட்பட 9 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மருத்துவர்,கர்ப்பிணி உட்பட 9பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி: மருத்துவர், கர்ப்பிணி உட்பட 9 பேருக்கு கொரோனா
புதுச்சேரி
  • Share this:
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்  நிருபர்களுக்கு அளித்த வீடியோ பதிவில், புதுச்சேரியில் ஏற்கனவே 37 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மேலும் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களில் ஜிப்மர் மருத்துவர்  ஒருவரும்  பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுச்சேரியில் இதுதான் முதல் முறை என கூறினார். தற்போது  பாதிக்கப்பட்ட 9 பேரில் 4 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றவர்கள் 15 முதல் 25 வயது நிரம்பியவர்கள் ஆவர்.

இதனால் தளர்வு ஏற்பட்டாலும் இளம் வயதினர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டாம் என இயக்குனர் அறிவுறுத்தினார். 9 பேர் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி உட்பட்ட 24 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை என்றும் இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.


Also see...

கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் மேட்ச் பிக்சிங் - சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லா

 








First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading