இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 357- பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

    இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகின்றது. இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,329,730 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 71,109 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 357- பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: