ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா..

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் மருத்துவர்கள் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா..
ஜிப்மர்
  • Share this:
புதுச்சேரியில் கதிர்காமம் அரசு  மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையில் கோவிட் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உயர் பாதுகாப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனையும் மீறி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து  விசாரிக்க மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியான மருத்துவர் முரளிதரனுக்கு ஜிப்மர் இயக்குனர் ஒத்துழைக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க...

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு: மக்களே யாரும் வெளியே வராதீங்க...

மேலும் புதுச்சேரி அரசின் சுகாதார துறை குழுவினர் உதவ வேண்டும் என்றும் 20 பேரின் குடியிருப்பு பகுதிகள்  தனிமைப்படுத்தப்பட்டதா, மற்றவர்களுக்கு பரவியுள்ளதா என்பதை விசாரிக்க உள்ளூர் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading