• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா அப்டேட்: ஹோலியில் கலந்துகொள்ளப்போவதில்லை - பிரதமர் மோடி

கொரோனா அப்டேட்: ஹோலியில் கலந்துகொள்ளப்போவதில்லை - பிரதமர் மோடி

  • Share this:
    கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த முறை ஹோலி கொண்டாட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கொரோனா பரவுவதை தடுக்க கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்க்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.



    சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் டெல்லியில் ஒருவர் மற்றும் தெலங்கானாவில் ஒருவர் என கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Also see...கொரோனா வைரஸ்! எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி?

    இதைத்தொடர்ந்து தெலங்கானா மென்பொறியாளருடன் தொடர்பில் இருந்த 88 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட டெல்லி நபரோடு தொடர்பில் இருந்த ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்கள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Also see...சீனாவில் கை குலுக்கவும், அணைக்கவும், முத்தமிடவும் கட்டுப்பாடு..!

    இந்நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த 29 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்த சுற்றுலாப் பயணி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனா தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

    கேரளாவில் ஏற்கனவே 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    Also see...கொரோனா பாதிப்பு: வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்..! - ட்விட்டர் சி.இ.ஓ அறிவிப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: