Home /News /coronavirus-latest-news /

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டங்கள் ரத்து...!

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டங்கள் ரத்து...!

மக்கள் நீதி மைய பொதுக்கூட்டங்கள் ரத்து

மக்கள் நீதி மைய பொதுக்கூட்டங்கள் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, மார்ச் 31 , 2020 வரை அனைத்துக் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, மார்ச் 31 , 2020 வரை அனைத்துக் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால்157 நாடுகளில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    Also read : கொரோனா அச்சம் : WWE வரலாற்றில் முதல் முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த ஸ்மாக்டவுன்

    சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆயிரத்து 809 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 725 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதை அடுத்து, தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் தினம்தோறும் பல்வேறு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

    Also read: உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு... இணையத்தை கலக்கும் #ThalapathySpeech ஹேஷ்டேக்!

    இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சி சார்பாக அனைத்துக் பொதுக்கூட்டங்கள் , கூட்டங்கள் , போன்றவற்றை தமிழகம் முழுவதும் மார்ச் 31 , 2020 வரை நிறுத்தி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: CoronaVirus, Makkal Needhi Maiam

    அடுத்த செய்தி