அமைச்சர் போர்டு வைத்துள்ளார்; முதல்வர் நிராகரிக்கிறார்...! கொரோனா விவகாரத்தில் கேள்வியெழுப்பும் டிடிவி தினகரன்

அமைச்சர் போர்டு வைத்துள்ளார்; முதல்வர் நிராகரிக்கிறார்...! கொரோனா விவகாரத்தில் கேள்வியெழுப்பும் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
  • Share this:
கொரோனா அச்சம் நிலவி வரும் சூழலில், சட்டமன்றத்தை ஒத்திவைக்குமாறு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா பீதி மற்றும் அச்சத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் பீடிக்கப்பட்டிருக்கும்போது, சட்டமன்றம் தொடர்ந்து நடப்பது நல்லதல்ல, ஒத்திவையுங்கள் என்று எழுந்த கோரிக்கையை முதல்வர் வழக்கம்போல ஆவேசமாக நிராகரித்திருக்கிறார்.

ஆனால், அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர் ஒருவரே, என்னை பொதுமக்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று எழுதிவைக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதையும் மறுக்க இயலாது.


சமீப காலமாகவே முதல்வர் சொல்வது ஒன்றும் அமைச்சர்கள் செய்வது ஒன்றுமாக இருக்கிறது. மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட கொரோனா வைரஸ் விஷயத்திலும் இந்த விளையாட்டைத் தொடராமல், எது அவசியமோ அதை ஒருங்கிணைந்து முடிவெடுத்து அமல்படுத்தும்படி பழனிசாமி அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see:
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading