கொரோனா பற்றி போலி பிரேக்கிங் நியூஸ் - வதந்தி பரப்பிய 3 பேர் கைது

 • Share this:
  கொரோனா வைரஸ் குறித்து போலி பிரேக்கிங் செய்தியை உருவாக்கி வதந்தி பரப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

  நேற்று முன் தினம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு இளைஞர்களின் புகைப்படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோவை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவி விட்டதனால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் பெற்றோர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கொரோனா பற்றி வதந்தி பரப்பிய குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன், ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வதந்தி பரப்பினால் கடும் தண்டனை:

  யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ பரப்பினால் இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள் - எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய தாமரை!
  Published by:Sheik Hanifah
  First published: