• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Nithyananda | தான் இந்தியாவில் கால் வைத்தால்தான் கொரோனா பெருந்தொற்று ஒழியும்: நித்தியானந்தா

Nithyananda | தான் இந்தியாவில் கால் வைத்தால்தான் கொரோனா பெருந்தொற்று ஒழியும்: நித்தியானந்தா

Youtube Video

நான்கு ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவு வாழ்கை வாழ்ந்துவரும் சாமியார் நித்தியானந்தா தான் இந்தியாவில் கால் வைத்தால் தான் கொரோனா பெருந்தொற்று ஒழியும் என்று புதிதாக சர்ச்சை கிளப்பியுள்ளார். கொரோனா நேரத்தில் நித்தியானந்தாவின் புதிய லீலை ஆரம்பமாகியுள்ளது.

  • Share this:
    கொலை ,கொள்ளை ,ஆட்கடத்தல், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. வழக்குகளில் இருந்து தப்பிக்க நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வருகின்றார். கடந்த ஆண்டு கைலாசா என்ற புதிய நாட்டை அறிவித்த நித்தி இளைஞர்கள் தன் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்தார்.

    ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அவர் தனது சத்சங்க உரையில் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்துச் செல்வதாகக் கூறியதால் அநேகமாக இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் ஒன்றையோ அல்லது நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ள ஆளில்லாத தீவுகளில் ஒன்றையோ அவர் விலைக்கோ அல்லது நீண்ட நாள் குத்தகைக்கோ எடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாலும் சத்சங் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் மூலமாக வளைதலங்களில் தொடர்ந்து பேசி வருகின்றார் நித்தியானந்தா. அத்தகைய சந்சங் நிகழ்ச்சிகளில் நித்தியானந்தா பேசுவது தமிழக இளைஞர்களிடையே படு பிரபலம் குறிப்பாக நான் பரதேதி, நான் ஒரு புறம்போக்கு என்று பேசிய வீடியோக்கள் அதில் உச்சம் தொட்டவை.

    ஆரம்பத்தில் தன்னை அவதாரம் என்று சொல்லி வந்த நித்தியானந்த பிறகு நானே சிவன் என்று அறிவித்து சில்மிஷங்களை அரங்கேற்றினார். அத்துடன் மீனாட்சி அம்மன் வேடம் , கருப்பு சாமி , காலபைரவர் என்று எல்லா தெய்வமும் நானே என்று கூறி கொண்டு அதற்கு ஏற்றார் போல் வேடம் போட்டு நடனம் ஆடுவது நித்தியானந்தாவின் வாடிக்கை.



    சில நாட்களுக்கு முன்பு திருபதி ஏழுமலையான் போன்ற வேடமிட்டு புகைபடங்களை பதிவிட்டிருந்தார். இது என்ன இது தோட ஸ்பெசல் ஒன்னு இருக்கு என்று வடிவேலு படத்தில் வரும் காமெடியை போன்று தற்போது புது வேசத்தை போட தொடங்கியுள்ளார் நித்தி.

    அதுதான் குறி சொல்லும் அம்மன் வேடம் 45 வயதிற்கு மேல் ஆகும் நித்தி இந்தியாவில் இருந்தால் புடவை கட்டி பெண் தெய்வங்களை போன்று வேசம் போடுவார் ஆனால் அவரோ ஆஸ்த்ரெலியா அருகே தலைமறைவாக இருப்பதால் காஷ்டியூம்கள் கிடைக்காமல் லோபட்ஜட்டில் தற்போது மேக்கப் போட்டுள்ளார்.

    புருவத்தை அடர்த்தியாக வரைந்துக்கொண்டு கண்களில் கலர் லென்சுடன் கண்களை சிமிட்டி சிமிட்டி பேசுவது தான் அது . அப்போது மகமாயி, மீனாட்சி, காளி அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் பெயரில் குறிகேட்கும் தனது சீடர்களுக்கு குறி சொல்லி வருகின்றார் நித்தி.

    மேலும் படிக்க... கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை - நித்தியானந்தா அறிவிப்பு

    அப்படி கொரோனா எப்போது இந்நியாவை விட்டு போகும் என்று சீடர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு அம்மன் தன் உடலில் புகுந்துள்ளது இந்தியாவில் காலடி எடுத்து வைத்து தால் தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் என்று கூறியுள்ளார். நித்தியானந்தாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில் கொரோனாவை அழிக்க வருவரா நித்தியானந்தா என்று நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: