LIVE | கொரோனா தொடர்பான சந்தேகங்களும்... பதில்களும்...!

News 18

"உங்களுக்குள் கொரோனா தொடர்பாக எழும் கேள்விகளை 044-66957311 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்கள்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகங்களும் அதிகரித்துக்கொண்டே உள்ளன.

    கொரோனா காலத்தில் சலூனுக்குச் செல்லலாமா? ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை நாமே வாங்கிச் சாப்பிடலாமா?

    எல்லோரும் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதா? வீட்டிலேயே தயாரிக்கப்படும் துணியால் ஆன முகக்கவசம் அணியலாமா?

    வெய்யில் குறைந்தால் கொரோனாவின் தாக்கம் குறையுமா? வீட்டுக்குள்ளேயே விளையாடி சோர்வடைந்த குழந்தைகளுக்கு என்ன மாற்று?

    மதுப்பழக்கம் உள்ளவர்கள் மாற்றைத் தேடிப்போவதை எப்படித் தடுப்பது? மருத்துவர் அனுமதியுடன் மது கொடுப்பது நல்ல தீர்வா?

    ஊரடங்கு காலத்தின் செரிமானப் பிரச்னை இருக்கிறதே? சீரகத்தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே?

    கபசுரக் குடிநீர் அல்லது கபசுர கஷாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா? கொரோனா சிறப்பு வார்டு எப்படி இருக்கும்?

    ஒரு கொரோனா நோயாளி 400 பேருக்குக் கொரோனாவைப் பரப்பமுடியுமா? பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளை எப்படிக் கையாள்வது?

    ஒரே முகக்கவசத்தை எத்தனை முறை பயன்படுத்தலாம்? வெளவால்களை கொரோனா தாக்கியிருப்பது நமக்கான ஆபத்தா?

    செல்லப்பிராணிகளை கொரோனா தாக்குமா?

    இப்படி உங்களுக்குள் கொரோனா தொடர்பாக எழும் கேள்விகளை 044-66957311 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்கள், நோய்த்தொற்று மருத்துவர் ராம் கோபாலகிருஷ்ணன் உங்களுக்கான பதில்களை அளிக்கிறார்.

    Published by:Sankar
    First published: