ஹோம் /நியூஸ் /கொரோனா /

Delta cases| ‘சூப்பர் பவர்’ டெல்டா : சாதாரண கொரோனாவை விட 1,260 மடங்கு வீரியமிக்கது- அடுத்து B.1.621?

Delta cases| ‘சூப்பர் பவர்’ டெல்டா : சாதாரண கொரோனாவை விட 1,260 மடங்கு வீரியமிக்கது- அடுத்து B.1.621?

டெல்டா வேரியண்ட் அச்சுறுத்தல் 135 நாடுகளில்.

டெல்டா வேரியண்ட் அச்சுறுத்தல் 135 நாடுகளில்.

கொரோனாவின் பலதரப்பட்ட மாறுபாடுகளில் ஒன்றான டெல்டா வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் தலைதூக்கி அதிகமாகப் பரவி வருகிறது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அமெரிக்காவில் மீண்டும் லட்சக்கணக்கானோர் தினசரி அடிப்படையில் பாதிப்படைந்து வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

  சீனாவில் நேற்று மீண்டும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவியுள்ளது. இந்த திடீர் டெல்டா வைரஸ் பரவல் கடந்த மாதம் தொடங்கியது.

  பிரான்ஸ் சமீபத்தில் கோர்சிகா மத்தியதரை தீவுப் பகுதியில் அவசரகாலத் திட்டம் ஒன்றை பிரகடனம் செய்தது, காரணம் 4வது அலையின் பிடியில் பிரான்ஸ் உள்ளது என்பதே.

  கிழக்குத் தைமூரில் டெல்டா வேரியண்டின் முதல் பரவல் கண்டுப்பிடிக்கப்பட்டு, சூப்பர் ஸ்ப்ரெட் டெல்டா குறித்த கவலைகளை அதிகரித்து வருகிறது.

  இந்தியாவில் டெல்லி அரசு கடந்த 3 மாதங்களில் மரபணு வரிசைப்படுத்தலுக்காக அனுப்பிய கொரோனா சாம்பிள்களில் 80% சாம்பிள்களில் டெல்டா வைரஸ் காணப்பட்டது.

  135 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவி வருவதாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

  அம்மை வைரஸ் போன்று ஆபத்தான டெல்டா:

  மெர்ஸ், சார்ச், எபோலாக்களை விட கொரோனா டெல்டா மிகவேகமாகப் பரவுவதோடு அதிகம் பேரை தொற்றக்கூடியது. புதிய ஆய்வுகளின் படி சிற்றம்மை உள்ளிட்ட அம்மை வைரஸை விட டெல்டா ஆபத்தானது.

  இதனால்தான் அமெரிக்காவில் 3 நாட்களாக தொடர்ந்து பரவல் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தை விட 35% அதிகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 40% அதிகரித்துள்ளது. மரண விகிதம் 18% அதிகரித்துள்ளது.

  சீனாவில் மேற்கொண்ட ஆய்வின் படி சாதாரண வகை கொரோனா வைரஸை விட டெல்டா வேரியண்ட் நம் மூக்கில் வைரஸ் சுமையை ஏற்றுவதில் 1,260 மடங்கு வீரியமானது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

  அடுத்ததாக B.1.621 என்ற கொரோனா உருமாறிய வகை முதலில் கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் தொடங்கி ஒரு அவுட் பிரேக் நடந்தது. இந்த கொரோனா வகை குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன. பிரிட்டனில் இது 37 பேருக்கு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் தற்போது அதிகம் பரவி வரும் டெல்டா வேரிய்ண்ட் போக இந்த புதுவகையும் பல நோயாளிகளிடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே இத்தகைய பரவல் வீரியமிக்க வைரஸுக்கு எதிராக புதிய தலைமுறை வாக்சின் தேவை என்கிறார் டாக்டர் ஃபாசி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona, Delta Variants, Delta+ variant