கொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி!

கொரோனா பாதிப்பு: மத ரீதியாக சித்தரிப்பவர்களுக்கு குஷ்பு பதிலடி!
குஷ்பு
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதம் தான் காரணம் என்று சித்தரித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருவோருக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் டெல்லியில் நடைபெற தப்லிக் ஜமாத் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டினருடன் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைவைத்து இஸ்லாமியர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளத்தில் பலர் கருத்து பதிவிட்டனர்.


இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் குஷ்பு, இந்த சூழ்நிலையில் பயமூட்டும் விஷயம் என்னவென்றால் சில அறிவில்லாதவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலை ஒரு சமூகப் பிரச்னையாக மாற்றுகிறார்கள். இந்த வைரஸுக்கு மதம் இல்லை. அது மதங்களைப் பார்ப்பதில்லை. கடவுளைக் கண்டும் அவை பயப்படுவதில்லை. அதை முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக் கொண்டு வீட்டில் இருக்கவும்.

அனைத்து மத ஒன்றுகூடல்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன் கொரோனா வைரஸுக்கு மதம் கிடையாது. அது ஜமாஅத்தோ, உ.பி.யோ கேரளாவோ எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் தவறுதான். நெருக்கடியான காலகட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காததது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது” இவ்வாறு குஷ்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: கொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு - பிரித்விராஜ் உருக்கம்First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading