உலக அளவில் 30,000-த்தைக் கடந்த கொரோனா பேரிழப்பு- இத்தாலியில் 10,000-த்தை தாண்டியது

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் 2,200 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் 2,200 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைத் தாண்டியுள்ளது.

    சீனாவில் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலக அளவில் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-த்தைத் தாண்டியுள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,500-த்தைத் தாண்டியுள்ளது. ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரையில் 2,200 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

    சீனாவில் இதுவரையில் 3,300 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துவருகிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரையில் 1,18,314 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் 70,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.

    ஸ்பெயினில் 57,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். ஈரானில் 23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் 2,640 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில், 979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Also see:
    Published by:Karthick S
    First published: