ஒரேநாளில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்...!

ஒரேநாளில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்...!
ஊஹான்
  • Share this:
உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 88 ஆயிரத்தை கடந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 22 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழப்பு 14 ஆயிரத்து 736-ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 29 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தாலியில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிகப்பட்ட நிலையில் 17 ஆயிரத்து 669 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


ஜெர்மனியில் பாதிப்பு 1 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்த போதும் உயிரிழப்பு 2 ஆயிரமாகவே உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், மீண்டும் 5-வது இடத்துக்கு சென்றது. ஒரே நாளில் பிரான்சில் 10 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியபோதும் குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாகவே 135-ஐ தாண்டவில்லை.

Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading