இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகிலேயே அதிகளவு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரத்தைக் கடந்து வரும் சூழலில், கடந்த 19 நாட்களில் 20,000 மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களில் 22,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,77,000மாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் நான்காவதாக பாதிக்கப்பட்ட ரஷ்யாவின் எண்ணிக்கையை மகாராஷ்டிரா மாநிலம் கடந்துள்ளது.
படிக்க...
சாலை திட்டத்திற்காக ரூ.33,000 கோடி வழங்கியுள்ளது எல்ஐசி : மக்களவையில் அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்
பலி எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் அண்மையில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 80 சதவீதத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
படிக்க...
பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?
அதேபோல வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மகாராஷ்டிரா அரசு நிறுத்தியதால், மத்திய பிரதேசம், கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர், தற்போது 10,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது