கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,868 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,868 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ்
  • Share this:
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,868 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 93 அதிகரித்து 1,868-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 73, 243-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10, 844 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் மற்றொரு குழு நேற்று ஆய்வு செய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் ரத்த மாதிரிகளை வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் கொரோனாவிலிருந்து எப்படி காப்பாற்றப்பட்டார்கள்? என்பதை மற்ற நோயாளிகளுக்கு விளக்க முடியும் என்றும் தேசிய சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு தலைவர் குவோ யங் ஹோங் (Guo Yanhong ) கேட்டுக்கொண்டுள்ளார்.


இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 300 அமெரிக்கர்களை மீட்கும் பணியில் 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈடுபட்டது.

இரண்டு விமானங்கள் மூலம், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா விமான நிலையங்களுக்கு அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 14 பேர் கலிபோர்னியாவில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சொகுசு கப்பலில் உள்ளவர்களுக்கு தொலைதொடர்பு வசதிக்காக 2,200 ஐ-போன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.Add Also...
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading