அமெரிக்காவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

அமெரிக்காவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

மாதிரிப் படம்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

  • Share this:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.60 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க...கூகுள் நிறுவனத்தில் நிற, பாலின பாகுபாடு இருப்பதாக புகார்.. ஊழியர்களிடம் மன்னிப்பு கோரிய சுந்தர் பிச்சை..

இதுவரை அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 63 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: