மாறுபடும் கொரோனா உயிரிழப்பு விகிதங்கள்: மாவட்ட விபரங்கள் காட்டும் உண்மைகள் என்ன?

தமிழ்நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும் மாவட்ட வாரியாக இறப்பு விகிதத்தில்  மாவட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

மாறுபடும் கொரோனா உயிரிழப்பு விகிதங்கள்: மாவட்ட விபரங்கள் காட்டும் உண்மைகள் என்ன?
கோப்பு படம்
  • Share this:
தமிழ்நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தாலும் மாவட்ட வாரியாக இறப்பு விகிதத்தில்  மாவட்டங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. பாதிப்புகள், இறப்புகள் எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் இருந்தாலும் இறப்பு விகிதத்தில் சென்னை பின் தங்கியே உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 23,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 184 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மாநிலத்தின் இறப்பு விகிதம் 0.78% ஆக உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,770 ஆக உள்ளது. இதில் 138 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இறப்பு விகிதம் 0.87 ஆகும்.

அடுத்தபடியாக அதிக இறப்புகள் கொண்ட மாவட்டங்கள் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர். இரண்டு மாவட்டங்களிலும் தலா 11 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டின் இறப்பு விகிதம் 0.89 ஆக உள்ளது. திருவள்ளூரில் இது 1.12% ஆகும்.


அடுத்தது மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 268 மட்டுமே. எனவே இறப்பு விகிதம் 1.11% ஆக உள்ளது.  மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் இரண்டு அல்லது ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் இறப்புகள் நிகழவில்லை.

வேலூர் 2.12%, விழுப்புரம் 0.56%, திருநெல்வேலி 0.28%, தூத்துக்குடி 0.88% திருவண்ணாமலை 0.46% , தேனி 1.83% , ராமநாதபுரம் 1.1% , நாமக்கல் 1.21%, கன்னியாகுமரி 1.44%, காஞ்சிபுரம் 0.48%, ஈரோடு 1.38% , திண்டுக்கல் 1.37% , கடலூர் 0.21% , கோவை 0.66% என்ற அளவில் இறப்பு விகிதம் உள்ளது.இறப்பு விகிதம் என்று பார்த்தால் மிக அதிகமாக காணப்படுவது புதுக்கோட்டை மாவட்டமே ஆகும். அங்கு 27 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் இறந்துள்ளார். விகிதம் என பார்த்தால்  3.7% ஆக உள்ளது. இவை அனைத்தும் மருத்துவமனைகளில் நடைபெறும் இறப்புகளின் அடிப்படையிலான கணக்குகள் ஆகும்.

சென்னையின் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் ஆங்காங்கே நடைபெறும் இறப்புகள் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிகிறது. சென்னையில் முன்னாள் நீதிபதி வி.ரத்தினம், 87 வயது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். அதே போல் ஐஐடி வளாகத்தில் வசித்த வந்த 56 வயது ஊழியர் ஒருவர் வளாகத்திலேயே உயிரிழந்தார். இறப்புக்கு பின் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது போன்ற இறப்புகள் அரசு காட்டும் பட்டியலில் இடம் பெறுவதில்லை.

தமிழகத்தின் மருத்துவமனைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதி பெற்று சிகிச்சைப் பெறுகின்றனர். உயிரிழந்த அரசு செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லாவை அனுமதிக்கப்பட்டிருந்தது போல, 7,097 பேர் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் COVID suspect வார்டுகளில் இருப்பவர்கள் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்ற விபரத்தை அரசு வெளியிடுவதில்லை.

மேலும் படிக்க: திருச்சியில் கொரோனாவால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading