இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம், ஆனால் இறப்பு விகிதம் குறைவு - ஹர்ஷ்வர்தன்

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நேற்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலி விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பலி விகிதம் 1.11 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் வேதனையானதுதான்.

    கடந்த பிப்ரவரி மாதம், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைவாக இருந்தது. அதேபோல், இப்போதும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவோம்.

    கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பீதி அடைய வேண்டாம். நீங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 17 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது என்றார்.
    Published by:Vijay R
    First published: