உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் உயிரிழப்பு விகிதம் குறையத் தொடங்கியிருந்தாலும், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கவலையளிப்பதாகவே உள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பதிவான உயிரிழப்புகளை கணக்கிடும் போது, சராசரியாக நாளொன்றுக்கு 4,700 பேர் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 196 பேரும், ஒவ்வொரு 18 நொடிகளுக்கு ஒருவரும் உயிரிழந்து வருகின்றனர்.
உலகில் கொரோனாவால் உயிரிழப்போரில் நான்கில் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழக்கிறார். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 44,700 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த பகுதியாக லத்தீன் அமெரிக்க நாடுகள் மாறியுள்ளன.
கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஜனவரி 9 ஆம் தேதி சீனாவின் ஊஹானில் ஏற்பட்டது. ஆனால் 6 மாதங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம், எய்ட்ஸ், மலேரியா நோய்தொற்றுகளால் ஒரு மாதத்தில் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.
உயிரிழப்போர் குறித்த தகவல்கள் நாடுகள் இடையே மாறுபடுவதையும் பார்க்க முடிகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் முதியவர்களே அதிகம் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, உயிரிழந்தோரில் 48 விழுக்காட்டினர் 80 வயதை கடந்தவர்கள் ஆவர்.
மேலும் படிக்கா...
நான் மரணிப்பது இது ஆறாவது முறை - பின்னணி பாடகி ஜானகி
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
அதேநேரத்தில் இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.