விளாத்திகுளம் பகுதியில் 44 வியாபாரிகளுக்கு கொரோனா - அனைத்து கடைகளும் மூடல்

கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கடந்த 4ந்தேதி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று பரிசோனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளாத்திகுளம் பகுதியில் 44 வியாபாரிகளுக்கு கொரோனா - அனைத்து கடைகளும் மூடல்
விளாத்திகுளம்
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்தி குளத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கடந்த 4ம் தேதி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 24 பேருக்கும், இன்று 20 பேருக்கும் என 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து விளாத்திகுளம் பேருராட்சி, கே.சுப்பிரமணியபுரம், கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாளைக்கு அனைத்து கடைகளயும்  அடைக்க வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளாத்திகுளம் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது.மெடிக்கல் மற்றும் பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 44 வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக் கொள்வது மட்டுமின்றி, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இதையெடுத்து இன்று விளாத்திகுளம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் விளாத்திகுளம் மார்க்கெட் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம் போல மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

நேற்றை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மேலும் படிக்க...

ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா - ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்

பொது மக்களுக்கு இது குறித்து முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெயரளவில் நடவடிக்கை இல்லமால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கணக்கெடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading