தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள்

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள்
முதலமைச்சருடன் அமைச்சர் தங்கமணி
  • Share this:
தமிழக மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, இன்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் 1 அமைச்சர் சேர்த்து மொத்தம் 9 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

ஏற்கனவே, அதிமுக எம்எல்ஏக்கள் பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அமைச்சர்களில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Also read... சென்னையில் புதிய தொற்றுக்கள் குறைந்து வரும் நிலையில் உயர்ந்த இறப்பு விகிதம்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி ஆர்.டி. அரசு, செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், கடந்த மாதம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சில கூட்டங்களில் அமைச்சர் தங்கமணி பங்கேற்று இருந்தார்.

இந்த கூட்டங்களில் துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். மேலும், நேற்று முன்தினம் இரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற ஐவர் குழு கூட்டத்திலும் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading