வல்லரசுகளை வீழ்த்திய கொரோனா!

52 ஆயிரம் பாதிப்புகளுடன் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

வல்லரசுகளை வீழ்த்திய கொரோனா!
கோப்புப் படம்
  • Share this:
உலகை கதிகலக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்றவற்றை நிலைகுலையச் செய்துள்ளது.

கடந்த ஆறு மாதம் முன்பு பல்வேறு பிணக்குகளால் சிதறிக் கிடந்த உலக நாடுகளை ஒன்று சேர வைத்தது கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ். ஆம், உலக நாடுகளுக்கு தற்போது ஒரே பொது எதிரி கொரோனாதான். விரல் விட்டு எண்ணக் கூடிய சில குட்டி நாடுகளை தவிர்த்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது கொரோனா. சீனாவில் தோன்றிய கொரோனா அந்நாட்டின் அதிரடி நடவடிக்கையால், 85 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்பும் 5 ஆயிரத்தை மிகாமல் தடுக்கப்பட்டது.

ஆனால் உலகில் கொரோனா பாதிப்பு 38 லட்சத்தைக் கடந்துவிட்டது. உயிரிழப்பும் 3 லட்சத்தை வேகமாக நெருங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுமே முக்கிய காரணம். கொரோனா உயிரிழப்பில் 60 % இந்நாடுகளில் ஏற்பட்டுள்ளது.


அமெரிக்காவில் வைரஸ் தொற்று 13 லட்சத்தையும், உயிரிழப்பு 75 ஆயிரத்தையும் நெருங்கியிருப்பதால் அவ்வல்லரசு நிலைகுலைந்துவிட்டது. உயிரிழப்பு விகிதம் தற்போது குறைந்துள்ளபோதிலும் உலகிலேயே அதிபட்சமாக ஒரே நாளில் 1526 பேரை அமெரிக்கா நேற்று பறிகொடுத்துள்ளது.

இதேபோல், உலகின் மற்றொரு ஹாட்ஸ்பாட்டாக செல்வந்த நாடுகள் நிறைந்த ஐரோப்பா மாறியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, போன்ற வளர்ந்த நாடுகளில் பாதிப்பு தலா 2 லட்சத்தையும் உயிரிழப்பு தலா 25 ஆயிரத்தையும் கடந்து கபளீகரம் செய்துள்ளது. விட்டேனா பார் எனும் வகையில் பிரான்சிலும் ஒன்றே முக்கால் லட்சம் பேரை தொற்றியதுடன் 26 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கியுள்ளது.

இதனிடையே, ஐரோப்பாவில் 30 ஆயிரம் பேரை பறிகொடுத்த முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. குணமடைந்தோர் விகிதத்தை இங்கிலாந்து வெளியிடாததும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் பரிசோதனைகள் குறைவாக நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஓரு சேர அமைந்துள்ள ரஷ்யாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ரஷ்யாவில் பாதிப்பு ஒன்றரை லட்சத்தைக் கடந்து பல நாட்களாகின்றன, கொரோனா தொற்று தரவரிசையில் ரஷ்யா ஏழாமிடத்துக்கு வேகமாக முன்னேறியுள்ளது. ஒரு லட்சம் பாதிப்புகளை கடந்த 10-வது நாடாக ஈரான் மாறியுள்ளது. 52 ஆயிரம் பாதிப்புகளுடன் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தைவான் மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனாவை வீழ்த்தியுள்ளன.

படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்


First published: May 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading