கொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை

சென்னையில் கடந்த வாரம் வரை தினசரி ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது தினசரி ஆயிரத்திற்கு குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகிறது.

கொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் இதுவரை 1,08,124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 94,100 பேர் குணமடைந்துவிட்டனர். 2290 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவொற்றியூரில் 380 பேர், மணலியில் 85 பேர், மாதவரத்தில் 447 பேர், தண்டையார்பேட்டையில் 619 பேர், ராயபுரத்தில் 809 பேர், திருவிக நகரில் 765 பேர், அம்பத்தூரில் 1510 பேர், அண்ணா நகரில் 1281 பேர், தேனாம்பேட்டையில் 827 பேர், கோடம்பாக்கத்தில் 1354 பேர், வளசரவாக்கத்தில் 824 பேர், ஆலந்தூரில் 521 பேர், அடையாறில் 980 பேர், பெருங்குடியில் 545 பேர், சோழிங்கநல்லூரில் 467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 8 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் தினசரி 2.000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஜூலை மாதத்தில் சோதனைகளை அதிகரிக்க தொடங்கியதால் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. இதன்படி ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 20.5 சதவீதமாக இருந்தது. ஜூலை இறுதியில் இந்த பாதிப்பு 9 சதவீதமாக குறைந்து. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இந்த பாதிப்பு தொடர்ந்து மேலும் குறைந்து வருகின்றது.


Also read: பிரேசிலில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு - அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் 984 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் 12,206 சோதனைகள் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி 8.1 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 8ம் தேதி சென்னையில் 986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. அன்றைய தினம் 14,027 பேருக்கு சோதனை செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சதவீதம் 7ஆக பதிவாகியுள்ளது

கடந்த 10 நாட்களில் பாதிப்பு சதவீதம்:ஜூலை 30 - 9.1
ஜூலை 31 - 8.9
ஆக.1 - 8.9
ஆக.2 - 8.6
ஆக.3  - 9.2
ஆக.4 - 10
ஆக.5 - 8.9
ஆக.6 - 9.4
ஆக.7 - 8.1
ஆக. 8  - 7
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading