• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அதிகரிக்கும் கொரோனா: செங்கல்பட்டில் தற்காலிக மருத்துவமனைகளாக மாறும் கல்லூரிகள்!

அதிகரிக்கும் கொரோனா: செங்கல்பட்டில் தற்காலிக மருத்துவமனைகளாக மாறும் கல்லூரிகள்!

அமைச்சர் தா.மோ.அன்பரசன்

அமைச்சர் தா.மோ.அன்பரசன்

வைஷ்ணவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தற்காலிக சித்தா மருத்துவமனை வரும் புதன்கிழமை திறக்கப்பட உள்ளது.

  • Share this:
    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தற்காலிகமாக 2,100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கல்லூரிகள், திருமண மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் அதிகளவில் நோய்தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திலும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரியில் கோரோனா நோயாளிக்கான தற்காலிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், வைஷ்ணவா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தற்காலிக சித்தா மருத்துவமனை வரும் புதன்கிழமை திறக்கப்பட உள்ளது. மேலும் இங்கு 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரத் பல்கலைக்கழகம், உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் 2,100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை நாகல்கேணியில் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு நீண்ட நேரம் காலதாமதமாக எழுந்த புகார் குறித்த அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி கூறினார்.

    செய்தியாளர் - சுரேஷ்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: