வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன?

இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதாகவும், தற்போது உயிரிழப்பு விகிதம் 2.82ஆக குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி நிலவரம் என்ன?
(கோப்புப்படம்)
  • Share this:
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் உயிரிழப்பு விகிதம் 6.13ஆக உள்ளதாகவும், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.82ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் 1,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000 கடந்துள்ளது. டெல்லியில் பாதிப்பு 21,000 நெருங்கியுள்ள நிலையில், குஜராத்தில் 17,200ஆக அதிகரித்துள்ளது. 8,000-க்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட 7வது மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 95,527ஆக அதிகரித்துள்ளது.

Also see:

  
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading