Corona | இந்தியாவில் கணிசமாக குறைந்த கொரோனா தொற்று... பொதுமக்கள் ஆறுதல்

தினசரி பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து இருப்பது பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 2,767 பேர் உயிரிழந்தனர்.

    இதனிடையே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி  அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, 3.23 லட்சமாக குறைந்துள்ளது.

    தினசரி பாதிப்பு குறைந்து இருந்தாலும், தொடர்ந்து 6வது நாளாக இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16.58 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சிகிச்சைக்குப் பிறகு 2.51 லட்சத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2,771 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 28.82 லட்சத்தைக் கடந்துள்ளது.  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 14 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்  கொரோனா தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: