தமிழக அரசுக்கு பாராட்டு... போலீஸ், தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா

 • Share this:
  கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவரகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 15-ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அரசு சார்பில் கூறப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே தன்னலமின்றி உழைக்கும் இவர்களை பிரதமர், முதலமைச்சர் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

  இந்நிலையில் தற்போது இயக்குநர் பாரதிராஜா காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கையுறைகள், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்த கொடிய நோயின் பரவலை திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது.  நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: தனது குழந்தை புகைப்படத்துடன் பெயரையும் அறிவித்த ஆல்யா மானசா!  Published by:Sheik Hanifah
  First published: