புதுச்சேரியில் கொரோனா சமூக பரவலாகிவிட்டது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

கிரண்பேடி

புதுச்சேரியில் கொரோனா சமூக பரவலாகி விட்டது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காணொளி மூலம் அதிகாரிகளுடன்  நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இது முடிந்தவுடன் ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் நடைபயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து நடைபயிற்சியில் ஈடுபடுவதை வீடியோ பதிவாக வெளியிட்ட கிரண்பேடி,கொரோனா குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், நல்ல உடல் நலம் மிக்கவர்கள் மட்டுமே இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது என்றும் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் புதுச்சேரியில்  சமூக பரவலாகிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க...ஹெச்1-பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

மேலும் இது எங்கு போய் முடியும் என தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை. இயற்கையாகவே இந்த வைரஸ் போனாலும் போய்விடும் என்றும் இதில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
Published by:Vaijayanthi S
First published: