‘தல வீட்டில இருக்காரு... நீங்களும் இருங்க’ - திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்!

‘தல வீட்டில இருக்காரு... நீங்களும் இருங்க’ - திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்!
அஜித்
  • Share this:
அஜித் பெயரைப் பயன்படுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வைரஸ் பரவி வருவதைத் தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்தது.


ஆனாலும் அதையும் மீறி மக்கள் பலரும் வெளியே வந்த வண்ணம் இருக்கின்றனர். அப்படி மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்க ஒவ்வொரு மாநில போலீசாரும் ஒவ்வொரு முறையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் 144 தடை உத்தரவை மதிக்காமல் வெளியே வரும் நபர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி அனுப்பி வைக்கின்றனர். உத்தரகாண்டில் வீட்டை விட்டு வெளியே சுற்றுபவர்களின் கைகளில் நான் சமூகவிரோதி என்று எழுதப்பட்ட பேப்பரைக் கொடுத்து அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர்.

காவல்துறையினரின் நடவடிக்கை இவ்வாறாக இருக்க நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட திரைத்துறை பிரபலங்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.


இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் பெயரைப் பயன்படுத்தி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கருத்து பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “தல வீட்லயே இருக்காரு.
நீங்க ??? வீட்டிலேயே இருங்கள். கொரோனா வரும்முன் காப்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கும் நடிகர் பவன் கல்யாண்..!First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்