புதுச்சேரியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைக் கண்காட்சி

புதுச்சேரியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைக் கண்காட்சி

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் கொரோனா கொலு கண்காட்சி நடைபெற்றது.

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் கொரோனா கொலு கண்காட்சி நடைபெற்றது.

 • Share this:
  புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் குயவர்பாளையம் சுகாதார மையத்தில் கொலு பொம்மைக் கண்காட்சி நடைபெற்றது. இதில் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  கொலுவில் பொம்மைகளுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டது.

  கிருமிநாசானி, PPE KIT, BP Apparatus, Pulse Oxy meter, Gloves, கபசுரம் போன்றவை காட்சிபடுத்தப்பட்டன. தொற்றுநோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வில் பாடல் பாடி, கொரோனா வடிவிலான தலைக்கவசம் அணிந்து நடனம் ஆடியது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

  Also read: பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 56 சமூகத்திற்கும் வாரியங்கள் அமைப்பு - ஆந்திர முதலமைச்சர் ஜெகனுக்கு ராமதாஸ் பாராட்டு

  அத்தோடு, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது குறித்து எடுத்துரைக்கும் விதமாக பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் மக்கள் கொலு கண்காட்சியைக் கண்டு பயன்பெறுகின்றனர்.
  Published by:Rizwan
  First published: