Corona | இந்தியாவிலிருந்து வருவோருக்குத் தடை - அமெரிக்கா அதிரடி

Corona | இந்தியாவிலிருந்து வருவோருக்குத் தடை - அமெரிக்கா அதிரடி

ஜோ பைடன்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் பரவத் தொடங்கிய இரண்டாம் அலை சுனாமி போல தாக்கிவருகிறது. ஒரு மாத காலத்துக்குள் கொரோனா பரவல் கட்டுங்கடங்காமல் அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் இல்லாத உச்சமாக ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், இந்தியாவிலிருந்து வரும் பயணிக்கு ஒவ்வொரு நாடுகளாக தடைவிதித்துவருகின்றன.

    ஏற்கெனவே, பல நாடுகள் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை என்று கடுமையான எச்சரிக்கையைப் பிறப்பித்தது. இந்தநிலையில், இந்தியாவிலிருந்து வரும் பயணிக்கு அமெரிக்காவும் தடைவிதித்துள்ளது. வரும் 4-ம் தேதியிலிருந்து இந்த தடை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த தடையிலிருந்து மாணவர்கள், கல்வியாளர்கள், செய்தியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிரேசில், சீனா, ஈரான், தென் ஆப்பிரிக்காவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், சில பிரிவினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: