இந்தியாவில் 6 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு : ஐ.சி.எம்.ஆர்
இந்தியாவில் 6 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: September 30, 2020, 11:26 AM IST
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஐசிஎம்ஆர் இயக்குநர் பலராம் பார்கவா கூறுகையில், "நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது ஆன்டிபாடி சோதனைகள் அடிப்படையில், மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கி இருக்கலாம் என தெரிவித்தார். இதில் குழந்தைகள், சிறுவர்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். இதனால் ஆகஸ்ட் மாதத்திலேயே, நாடு முழுவதும் 6 கோடி பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்று தெரிவித்த அவர், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் இரண்டு மடங்கு அதிகம் பாதிக்கப்படுவதாக" தெரிவித்தார்.
மேலும் பத்து வயதைக் கடந்தவர்களில், 15-இல் ஒரு நபருக்கு கொரோனா இருந்ததாகவும் அவர் கூறினார். குளிர்காலம் மற்றும் பண்டிகைகள் நெருங்குவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை மாநிலங்கள் கையாளவேண்டும் எனவும் பலராம் பார்கவா அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க...சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை இதனைதொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் உச்சத்தை அடையவில்லை என்று தெரிவித்தார். இதனால் கூட்டு எதிர்ப்பு சக்தியை அடையும் நிலையில் தற்போதைக்கு இந்தியா இல்லை என்றும் கூறினார்.
மேலும் பத்து வயதைக் கடந்தவர்களில், 15-இல் ஒரு நபருக்கு கொரோனா இருந்ததாகவும் அவர் கூறினார். குளிர்காலம் மற்றும் பண்டிகைகள் நெருங்குவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழிமுறைகளை மாநிலங்கள் கையாளவேண்டும் எனவும் பலராம் பார்கவா அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க...சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மற்றொரு வைரஸ் - ICMR எச்சரிக்கை