• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 191 கர்பிணி பெண்கள் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா வைரஸால் 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19,333 பேர் குணமடைந்துள்ள நிலையில் 326 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 சதவிகிதம் ஆகும்.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும், ராயபுரம் மருத்துவமனையில் 70 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 29 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.

    Watch Also:







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: